தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாக மலையாளத் திரைப்படம் ஆட்டம் திரையிடப்பட்டது

Posted On: 22 NOV 2023 2:43PM by PIB Chennai

திரைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமா பிரிவு ஆட்டம் மலையாளத் திரைப்படத்துடன் நேற்று தொடங்கியது. ஆனந்த் எகர்ஷி இயக்கிய  ட்டம், சில சங்கடமான சூழ்நிலைகளில் ஒரு தனிநபருக்கும் ஒரு குழுவுக்கும் இடையிலான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது.

கோவாவில் நடைபெறும் 54-வது  இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்டம் திரைப்படத்தின் இயக்குர் ஆனந்த் எகர்ஷி, "இந்தப் படத்தின் மையக்கரு எந்தப் பாலின அல்லது ஆணாதிக்கம் பற்றி குறிப்பிடவில்லை. இது தனிநபருக்கும் குழுவிற்கும் இடையிலான செயல்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இதில் ஆண்கள் குழுவாகவும், தனிநபர் ஒரு பெண்ணாகவும் உள்ளனர்." கதைக்களம் ஒரு பாலின ஆய்வை உள்ளடக்கியது, ஆனால் படம் பிராந்தியம் அல்லது பாலினம் சார்ந்தது அல்ல என்று அவர் கூறினார்.

140 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தத் திரைப்படத்தில்  வினய் ஃபோர்ட், ஜரின் ஷிஹாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் கருத்துருவாக்கம் குறித்து பேசிய முன்னணி நடிகரான வினய் ஃபோர்ட், தனது 20 ஆண்டுகால நாடக நண்பர்களுடன் ஒரு பயணத்தில் இருந்ததாகவும், அங்கு "எங்கள் நட்பு, ஒற்றுமை மற்றும் கலையை ஏதோ ஒரு வழியில் பிரதிபலிக்க ஒரு திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தோம்" என்றும் கூறினார்.

திரைப்படம் குறித்து ஜரின் ஷிஹாப் கூறுகையில், "படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பிரமாதமாக உள்ளதுஎன்றார். "இந்தப் படத்திற்காக நாடகக் கலைஞர்கள் ஒன்றிணைவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனந்த் மிகவும் புத்திசாலித்தனமாக நாடக சாதனங்களையும் கூறுகளையும் பயன்படுத்தி திரைக்கதைக்கு கதைசொல்லலை உயர்த்தியுள்ளார்" என்றும் அவர் கூறினார்.

படத்தின் சவுண்ட் டிசைனரான ரெங்கநாத் ரவி, ஒரே இடத்தில் 13 நடிகர்களுடன் படப்பிடிப்பு நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்து பேசினார், ஒலி வடிவமைப்பு அதை எவ்வாறு சுவாரஸ்யமாக்கியது, படத்திற்கு ஒரு நுணுக்கமான தன்மையை உருவாக்கியது என்பது பற்றியும் அவர் விவரித்தார்.

ஆட்டம்: அரங்கு என்ற நாடகக் குழுவால் ஒரு பெண்ணும் பன்னிரண்டு ஆண்களும் செயல்படுவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட நாடகம் இது. இதற்கு முன்பு வினய் நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் இருந்து மாற்றப்பட்ட ஹரியின் நண்பர்களான கிறிஸ் மற்றும் எமிலிக்கு வாய்ப்பு வழங்கப்படும்போது, அவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது. நாடகத்தின் ஒரே பெண் கலைஞரான அஞ்சலி, வினய்யை காதலித்து, கிறிஸ் மற்றும் எமிலி தொகுத்து வழங்கிய விருந்தில் ஹரி தன்னை மோசமாக நடத்தியதாகத் தெரிவிக்கிறார். வினய் இந்த தகவலை மதனுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஹரியின் உண்மையான நிறத்தை வெளியே கொண்டு வர முயற்சிக்கிறார். அவர் இதை மற்ற குழுவுடன் விவாதிக்க ஒப்புக்கொள்கிறார். இறுதியில் ஹரியை வெளியேற்றுகிறார். நட்பு ஆபத்தில் உள்ளது, ஆனால் பணப் பயன்களும் வெற்றியும் மக்களின் தார்மீக நிலைக்கு வெகுமதி மற்றும் லஞ்சம் கொடுப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்வுகள் தொடரும்போது, உண்மைகள் வெளிப்படும்போது, யதார்த்தம் விசித்திரமாகத் தெரிகிறது.

 

***

ANU/PKV/SMB/AG/KPG



(Release ID: 1978837) Visitor Counter : 75