குடியரசுத் தலைவர் செயலகம்
சம்பல்பூர் பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
22 NOV 2023 12:50PM by PIB Chennai
ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 22, 2023) தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் மூலம் சிறந்த சமூகத்தைக் கட்டமைக்க மாணவர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் கல்வி எப்போதும் ஒரு முக்கியமான, பங்களிப்பைக் கொண்டுள்ளதாகக் கூறினார். சேவை, சமத்துவம், அனுதாபம் போன்ற தார்மீக, மனித விழுமியங்கள் நமது கலாச்சாரத்தின் அடித்தளமாகும் என்றும், இளைஞர்கள் இந்த மகத்தான இலட்சியங்களை அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார். அவர்கள் தங்கள் வயதான பெற்றோரையும், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரையும் கவனித்து ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விழுமியங்கள் குறித்த நேர்மறையான மனப்பான்மையை கல்வியின் மூலம் குழந்தைகளின் மனதில் உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தார்மீகக் கல்வி நமது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப உதவுவதுடன், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களையும் கொண்டுவருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இரக்கம், நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது என்று அவர் கூறினார். இந்தக் குணங்களைக் கொண்ட ஒரு நபருக்கு நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம் என்றும், தனிமனிதருக்கு ஏற்படும் நேர்மறையான மாற்றங்களால் சிறந்த சமுதாயம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா மகிழ்ச்சி, அமைதி, மகிழ்ச்சிக்கான பாதையை, சுய உணர்தல், தெய்வீக அனுபவத்தின் மூலம் அணுகக்கூடியதாக மாற்றுகிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
---------
ANU/PKV/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1978710)
आगंतुक पटल : 138