தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் ஆகியோர் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சினி மேளாவை இன்று தொடங்கி வைத்தனர்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கோவா முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் ஆகியோர் கூட்டாக கோவாவின் பனாஜியில் உள்ள யோக சேதுவில் இன்று இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சினி மேளாவை தொடங்கி வைத்தனர்.
தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் கீழ் இந்தியாவின் திரைப்பட பாரம்பரியத்தை பாதுகாத்தல், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தால் அமைக்கப்பட்ட அரங்கை திரு அனுராக் சிங் தாக்கூர் பார்வையிட்டார்.
இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகத்தின் அரங்கை மத்திய அமைச்சரும் , முதலமைச்சரும் பார்வையிட்டனர்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா என்பது சினிமா சிறப்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, கலாச்சார பன்முகத்தன்மையின் கொண்டாட்டமும் கூட. இந்த ஆண்டு, இந்திய சர்வதேச திரைப்பட விழா சினி-மேளா திரைப்பட விழாக்களுக்கு ஒரு அற்புதமான கூடுதல் நிகழ்வாகும். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பாளர்கள் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பதிவு செய்யப்படாத உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் போன்ற மற்றவர்களும் சினிமா, கலைகள், கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு போன்ற அம்சங்களைக் கொண்டாடும்போது உற்சாகத்தை அனுபவிக்க முடியும்.
2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்திற்கு மொத்தம் 544.82 கோடி செலவில் 2016-ஆம் ஆண்டில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் அமைக்கப்பட்டது. இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகம் 19 ஜனவரி 2019 அன்று மும்பை திரைப்படப் பிரிவு வளாகத்தில் இந்தியப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
******
ANU/AD/BS/RS/KRS
(Release ID: 1978521)
(Release ID: 1978612)
Visitor Counter : 213