தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav
iffi banner

54 -வது சர்வதேச திரைப்பட விழாவில் வி.எஃப்.எக்ஸ் மற்றும் தொழில்நுட்ப அரங்கை மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்

கோவாவில் நடைபெறும் 54-வது சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக விஎஃப்எக்ஸ் மற்றும் தொழில்நுட்ப அரங்கை மத்திய தகவல், லிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று திறந்துவைத்தார். சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய திரைப்படக் ககத் திரைப்பட சந்தை வரலாற்றில் முதல் முறையாக நிறுவப்பட்ட வி.எஃப்.எக்ஸ் மற்றும் தொழில்நுட்ப அரங்கில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், மெய்நிகர் ரியாலிட்டி, சி.ஜி.ஐ ஆகியவை திரைப்பட தயாரிப்பு தொழில்நுட்பத்தில் மிகவும் துடிப்பான, அதிவேக மற்றும் அதிநவீன முன்னேற்றங்களை வெளிப்படுத்துகின்றன.

சினி மியூசியம், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றின் காட்சி அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு  பிரிவுகளை அமைச்சர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

சோனியின் ஃபுல் ஃப்ரேம் சினிமா லைன் கேமராக்களின் செயல்விளக்கத்தை அமைச்சர் மேற்கொண்டார். எதிர்காலக் கற்பனைத் திறனுக்கான சிந்தனைகள் 75 திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் திரைப்படத் இயக்குநர்களுடன் கலந்துரையாடினார். தொழில்நுட்ப அரங்கின் புத்தகத்திலிருந்து திரைக்கு என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

10-வது இடத்தில் இருந்து 5-வது பெரிய ஊடக மற்றும் பொழுதுபோக்குப் பொருளாதாரமாக இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாது என்று திரு தாக்கூர் கூறினார். நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்பட மற்றும் ஊடக உள்ளடக்கத்தின் திறமை மற்றும் அளவைப் பார்க்கும்போது, இந்தியா விரைவில் உலகின் 3-வது பெரிய ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையாக மாறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

திரைப்படத் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத் தலையீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை இந்தியா ஏற்றுக்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர், "நமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் திறமை மற்றும் நமது தொழில்துறை தலைவர்களின் கண்டுபிடிப்புகளால் ஆதரிக்கப்படும் திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனுக்கு இந்தியா மிகவும் விரும்பப்படும் இடமாகும்” என்று குறிப்பிட்டார்.

புதிய தொழில்நுட்ப தலையீடுகளின் பங்கை எடுத்துரைத்த அமைச்சர், "இந்தியா கதை சொல்லும் நாடு, மக்கள் அதிவேகமான, ஆக்கபூர்வமான மற்றும் அசல் உள்ளடக்கத்தை விரும்புகிறார்கள், ரசிக்கிறார்கள்" என்று கூறினார். ஊடகம் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் படைப்பாளிகள் எப்போதும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், பொழுதுபோக்குடன் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பதிலும் கல்வி கற்பிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

"இந்தியா போஸ்ட் புரொடக்ஷனின் மையமாக உள்ளது. புதிதாக நிறுவப்பட்ட விஎஃப்எக்ஸ், தொழில்நுட்ப அரங்கு ஆகியவை திரைப்படத் தயாரிப்பில் போஸ்ட் புரொடக்ஷனை மேலும் அதிகரிக்கும்" என்று திரு தாக்கூர் மேலும் கூறினார்.

கற்பனைத் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வல்லுநர்கள் மெய்நிகர் உலகங்களை உருவாக்குவதன் மூலமும், புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களை உருவாக்குவதன் மூலமும், கேமராவுக்கு அப்பால் மேஜிக்கைக் காண்பிக்க தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களைப் பகிர்வதன் மூலமும் திரைப்படத் தயாரிப்பின் சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னேற்றங்களை வெளிப்படுத்துவார்கள்.

கூகிள் கலை மற்றும் கலாச்சாரம், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ஆகியவை இந்த ஆண்டின் மதிப்புமிக்க, பங்கேற்கும் பிராண்டுகளில் சிலவாகும்.

 

***

ANU/SMB/BS/RS/KPG

iffi reel

(Release ID: 1978595) Visitor Counter : 196