தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் திரைப்பட பஜாரின் 17-வது பதிப்பை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்

Posted On: 20 NOV 2023 6:18PM by PIB Chennai

கோவாவில் உள்ள மாரியட் ரிசார்ட்டில் மிகப்பெரிய தெற்காசிய திரைப்பட சந்தையான ஃபிலிம் பஜாரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஃபிலிம் பஜார், சிந்தனைகளின் பரபரப்பான சந்தையைப் போலவே, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் கதைசொல்லிகளுக்கு ஒரு புகலிடமாகும். இது படைப்பாற்றல் மற்றும் வணிகம், யோசனைகள் மற்றும் உத்வேகங்களின் சங்கமமாகும. அவை இந்த செழிப்பான சினிமா சந்தையின் கட்டமைப்புத் தொகுதிகளாக அமைகின்றன என்று அவர் கூறினார்.

இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, வருடாந்திர வளர்ச்சி விகிதம் 20% உடன், உலகின் ஐந்தாவது பெரிய மற்றும் மிகவும் உலகமயமாக்கப்பட்ட தொழில் என்று பாராட்டப்படுகிறது. அதன் 17-வது ஆண்டில், ஃபிலிம் பஜார் .எஃப்.எஃப். இன் தவிர்க்க முடியாத அடித்தளமாக மாறியுள்ளது. எல்லைகளைக் கடந்து ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட சந்தைகளில் ஒன்றாக பரிணமித்துள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்

இந்த ஆண்டு, ஃபிலிம் பஜாருக்கான திரைப்படங்களின் தேர்வு புனைகதைகள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், திகில் திரைப்படங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், ஆணாதிக்கம், நகர்ப்புற கவலை, தீவிர வறுமை, காலநிலை நெருக்கடி, தேசியவாதம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான உலகளாவிய கருப்பொருள்களைக் கையாளும் அனிமேஷன் திரைப்படங்கள் ஆகியவற்றின் மாறுபட்ட கலவையை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இணை தயாரிப்பு சந்தை குறித்து பேசிய அமைச்சர், "17 வெவ்வேறு மொழிகளில் வாழ்க்கையை ஆராய்ந்து, 7 நாடுகளைச் சேர்ந்த பன்னிரண்டு ஆவணப்படங்களை இணை தயாரிப்பு சந்தையில் பெருமையுடன் வழங்குகிறோம். இது திரைப்பட இயக்குநர்களின் லென்ஸ் மூலம் யதார்த்தத்தின் இதயத்திற்குள் ஒரு பயணம் மேற்கொண்டதை போன்றதாகும்.

***

ANU/AD/BS/RS/KRS



(Release ID: 1978326) Visitor Counter : 102