கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகம், சிறப்பு இயக்கம் 3.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் ரூ. 5. 70 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது

Posted On: 18 NOV 2023 1:57PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் பாதைகள் அமைச்சகம் மூன்றாகம் கட்ட தூய்மை இந்தியா சிறப்பு இயக்கத்தை அதன் தலைமை அலுவலகத்திலும் மற்றும் நாடு முழுவதும் அதனுடன் இணைந்த அனைத்து அலுவலகங்களிலும் நடத்தியது. 2023 அக்டோபர் 2 அன்று தொடங்கிய இந்த இயக்கம் 2023 அக்டோபர் 31 வரை நடைபெற்றது. பொதுமக்களின் குறை தீர்ப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள் மீது நடவடிக்கை, தூய்மை இயக்கம், குப்பைகளை அகற்றுதல் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்து தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

2023 அக்டோபர் 2 முதல் 31-ம் தேது வரையிலான காலகட்டத்தில், 395 தூய்மை இயக்கப் பணிகளை இந்த அமைச்சகம் நடத்தியுள்ளது. 62,607 காகிதக் கோப்புகளும் 29,304 மின் கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன.  தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் சுமார் 3,710 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ. 5,70,42,927 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்  உள்ள அனைத்து அலுவலகங்களும் சிறப்பு இயக்கம் 3.0-ல் ஆர்வத்துடன் பங்கேற்றன. அத்துடன் இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன.  

*****

ANU/SMB/PLM/DL



(Release ID: 1977837) Visitor Counter : 75