மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
டிஜிட்டல் இந்தியா ஆர்.ஐ.எஸ்.சி-வி (டி.ஐ.ஆர்-வி) திட்டம் குறித்த நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் தொடங்கி வைத்தார்
Posted On:
17 NOV 2023 1:06PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியா ஆர்.ஐ.எஸ்.சி- V (5) (டி.ஐ.ஆர்-வி) திட்டம் எனப்படும் 5-ம் தலைமுறை குறைக்கப்பட்ட நிரல் வரிசைத் தொகுப்புக் கணினி (5-ம் தலைமுறை டிஜிட்டல் இந்தியா ஆர்.ஐ.எஸ்.சி-வி குறித்த நாடு தழுவிய நிகழ்ச்சிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் இன்று (17.11.2023) தொடங்கி வைத்தார். மேம்பட்ட கணினி வளர்ச்சி மையமான சி-டாக், இந்திய மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் நிறுவனமான ஐ.இ.இ.இ கவுன்சில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில், ஆர்.ஐ.எஸ்.சி-5 வடிவமைப்பு தொடர்பான இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
தில்லியில் நடைபெற்ற இதுதொடர்பான நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவது மற்றும் அவற்றை ஏற்றுச் செயலாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.
புத்தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர், இத்திட்டத்தின் கீழ், டிஐஆர்-வி அடிப்படையிலான மின்னணு சிப்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். இது குறை கடத்திகள் (செமிகண்டக்டர்) துறையில் முன்னணி நாடாக இந்தியா மாறுவதற்குப் பங்களிக்கும் என்று அவர் கூறினார்.
டி.ஐ.ஆர் வி அடிப்படையிலான மின்னணு சிப்-கள் மற்றும் அமைப்புகள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு டிஜிட்டல் தயாரிப்புகளில் ஒருங்கிணைக்கப்படுவதை இந்தத் திட்டம் உறுதி செய்யும் என்று திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.
அலையன்ஸ் பல்கலைக்கழகம் - பெங்களூர், அமிர்தா பல்கலைக்கழகம் - பெங்களூர், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிலானி - ஹைதராபாத், சண்டிகர் பல்கலைக்கழகம் - பஞ்சாப், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - கேரளா, குரு தேஜ் பகதூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - தில்லி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி - மத்தியப் பிரதேசம், கேஐஇடி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் – காஜியாபாத், கோனேரு லட்சுமய்யா பல்கலைக்கழகம் - ஆந்திரா, மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - ராஜஸ்தான், நேதாஜி சுபாஷ் பொறியியல் கல்லூரி - மேற்கு வங்கம், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி - தமிழ்நாடு, தாக்கூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி - மகாராஷ்டிரா, வர்தமான் பொறியியல் கல்லூரி - தெலுங்கானா மற்றும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (வி.ஐ.டி) – தமிழ்நாடு ஆகிய 15 கல்வி நிறுவனங்களில் இந்த நிகழ்ச்சி ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
------
ANU/PKV/PLM/AG/KV
(Release ID: 1977599)
Visitor Counter : 131