சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உத்தராகண்டில் சில்க்யாரா சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை விரைவாக மீட்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தீவிரம்
Posted On:
13 NOV 2023 6:19PM by PIB Chennai
சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தராகண்டில் உள்ள ரேடி கணவாயின் கீழ் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி அச்சுகளுடன் இணைவதற்கு சில்கியாராவில் 4.531 கி.மீ நீளமுள்ள இருவழி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 12ம் தேதி காலை 05.30 மணியளவில் சில்க்யாரா நுழைவாயிலில் இருந்து சுரங்கத்திற்குள் சுமார் 40 தொழிலாளர்கள் 260 மீ முதல் 265 மீட்டர் வரை மறுசீரமைப்பு பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது , சில்க்யாரா நுழைவாயிலில் இருந்து 205 மீட்டர் முதல் 260 மீட்டர் வரை சரிவு ஏற்பட்டது.
இந்த சம்பவம் உடனடியாக மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது மற்றும் மாநில நிர்வாகம், எஸ்.டி.ஆர்.எஃப் , என்.டி.ஆர்.எஃப், எம்.ஓ.ஆர்.டி.எச் , என்.எச்.ஐ.டி.சி.எல் , என்.எச்.ஏ.ஐ, பி.ஆர்.ஓ மற்றும் பிற மாநில துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் ஊழியர்கள் சிக்கிய பகுதிக்கு கிடைக்கக்கூடிய குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன், நீர் , மின்சாரம் , சிறிய பேக் செய்யப்பட்ட உணவை வழங்குவதன் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.
வாக்கி டாக்கி மூலம் சிக்கியுள்ள தொழிலாளர்களுடனான தொடர்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவாக வெளியேற்றி மீட்பதற்காக பின்வரும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன:
இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் 40 மீட்டர் தோண்டும் பணி தொடங்கியது.
21 மீட்டர் நீளமுள்ள தளர்வான குப்பைகள் அகற்றப்பட்டதுடன், தளர்வான சேற்றை அகற்றும் பணியும் தொடர்ந்தது. ஹைட்ராலிக் ஜாக் உதவியுடன் ஸ்டீல் குழாயை அழுத்தி உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக ஆட்கள், பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அடையாளம் காணப்பட்டு நீர்ப்பாசனத் துறை நிபுணர்களுடன் இன்று மாலைக்குள் அணிதிரட்டப்படுகிறது. சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவாக வெளியேற்ற அனைத்து ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ANU/AD/BS/KRS
(Release ID: 1976758)
Visitor Counter : 134