பிரதமர் அலுவலகம்
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திரமோடி வரவேற்பு
விரிவான உலகளாவிய உத்திப்பூர்வமான கூட்டாண்மைக்கு உதவும் வகையில் பரஸ்பரம் இரு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வடிவத்தை பிரதமர் வரவேற்றார்.
பிரதமரின் அமெரிக்க விஜயம் மற்றும் ஜி20 உச்சிமாநாட்டிற்காக அதிபர் பைடன் இந்தியாவிற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றத்தை அமெரிக்க அமைச்சர்கள் எடுத்துரைத்தனர்.
மேற்கு ஆசியா உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் இருவரும் விவாதித்தனர்.
பைடனுடன் தமது தொடர்ச்சியான பரிமாற்றங்களை பிரதமர் எதிர்நோக்கியுள்ளார்
Posted On:
10 NOV 2023 8:22PM by PIB Chennai
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், திரு. ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. லாய்ட் ஆஸ்டின் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருடன் 2+2 அமைச்சர்கள் கூட்டத்தில் அவர்கள் நடத்திய விவாதங்கள் குறித்து இரு அமைச்சர்களும் பிரதமருக்கு விளக்கினர்.
பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பம், விண்வெளி, சுகாதாரம் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு துறைகளில் முன்னேற்றம், ஜூன் 2023 இல் பிரதமரின் அமெரிக்கப் பயணம் மற்றும் புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டில் இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பையும் அவர்கள் முன்னிலைப்படுத்தினர்.
அனைத்துத் துறைகளிலும் ஆழமான ஒத்துழைப்பு குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விரிவான உலகளாவிய உத்திப்பூர்வமான கூட்டாண்மை ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நிகழ்வுகள் உட்பட, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்த விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பு தொடர்வதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
அதிபர் பைடனுக்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவருடன் தொடர்ந்து பரிமாற்றங்களை எதிர்நோக்குவதாக பிரதமர் திரு.நரேந்திரமோடி கூறினார்.
****
PKV/BS/DL
(Release ID: 1976337)
Visitor Counter : 103
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam