தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

54-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் நாளைய 75 படைப்பாளர்கள் என்பதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு உட்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள்

Posted On: 09 NOV 2023 2:20PM by PIB Chennai

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி நாளைய 75 படைப்பாளர்கள் முன்னெடுப்புத் திட்டத்தின் 3-வது பகுதிக்காக நாடு முழுவதும் 75 திறமைமிக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

 ஆந்திரா, அசாம், பீகார், தில்லி, கோவா, குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம்,  மேற்கு வங்கம் ஆகிய நாட்டின் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நாளைய சினிமா திறமையாளர்களாக உள்ளனர். மகாராஷ்டிராவிலிருந்து அதிக எண்ணிக்கையில் தேர்வு செய்யபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தில்லி, மேற்கு வங்கம், ஹரியானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், "இந்த ஆண்டு, நாளைய 75 படைப்பாளர்கள்   என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக நாடு முழுவதிலுமிருந்து 10 பிரிவுகளில் 75 திறமையான இளம் படைப்பாளிகளை நாம் பெற்றுள்ளோம்" என்று கூறினார். திரைப்படத் தயாரிப்பு சவாலின் ஒரு பகுதியாக தயாரிக்கப்படும் அற்புதமான குறும்படங்களை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.

திரைப்படத் துறை மற்றும் மாநில வாரியாக வெற்றியாளர்களின் பட்டியலை ஐ.எஃப்.எஃப்.ஐ இணையதளத்தில் காணலாம்.

இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஒளிப்பதிவு, நடிப்பு, படத்தொகுப்பு, பின்னணிப் பாடல், இசை அமைப்பு, ஆடை அலங்காரம் மற்றும் ஒப்பனை, கலை மற்றும் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் (விஎஃப்எக்ஸ்), ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) ஆகிய துறைகளில் உள்ள திறமைகளின் அடிப்படையில் 600-க்கும் அதிகமான மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து 75 பங்கேற்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயக்குநர் பிரிவில் 18 கலைஞர்களும், அனிமேஷன், விஎஃப்எக்ஸ், ஏஆர் & விஆர் பிரிவைச் சேர்ந்த 13 கலைஞர்களும், ஒளிப்பதிவு பிரிவில் 10 கலைஞர்களும் உள்ளனர்.

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் (வி.எஃப்.எக்ஸ்), ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏ.ஆர்) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்) பிரிவில் இருந்து அதிகபட்ச எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது இந்தியாவின் ஏ.வி.ஜி.சி-எக்ஸ்.ஆர் துறையை விரைவுபடுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு ஏற்ப உள்ளது.

பங்கேற்பாளர்கள் அனைவரும் 35 வயதிற்குட்பட்டவர்கள் என்றாலும், இசை அமைத்தல் / ஒலிப்பதிவு பிரிவில் மகாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த 18 வயது ஷஷ்வத் சுக்லா இளைய பங்கேற்பாளராக உள்ளார்.

***

(Release ID:1975841)

ANU/SMB/IR/AG/KRS



(Release ID: 1975965) Visitor Counter : 100