நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தவறான விளம்பரம் செய்ததற்காக கான் பயிற்சி மையத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது
Posted On:
09 NOV 2023 4:03PM by PIB Chennai
தவறான விளம்பரம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக கான் பயிற்சி மையத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நாடு முழுவதும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மீறப்படுவதைக் கருத்தில் கொண்டு, தலைமை ஆணையர் திருமதி நிதி காரே மற்றும் ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரங்கள் மற்றும் தவறான கருத்துக்களை விளம்பரப்படுத்தும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக கான் பயிற்சி மையத்திற்கு (கே.எஸ்.ஜி) எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆண்டு தோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) குடிமைப்பணி தேர்வு முடிவு வெளியாகும்போது, பல்வேறு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்கள் வெற்றி பெற்றவர்களை தங்கள் மாணவர்கள் என்று விளம்பரம் செய்கின்றன. பயிற்சி நிறுவனங்கள், அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்த படிப்புகள் அல்லது அவர்கள் செலுத்திய கட்டணம் பற்றி குறிப்பிடாமல், பயிற்சியில் சேரவுள்ள விண்ணப்பதாரர்கள் பாதிக்கும் வகையில் முதன்மை வெற்றியாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களின் படங்கள் பெயர்களைப் பயன்படுத்துகின்றன.
எனவே, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து பல்வேறு ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் கான் பயிற்சி மையமும் ஒன்றாகும்.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கான் பயிற்சி மையம் பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியது தெரியவந்தது. ஆனால் குடிமைப்பணி தேர்வு 2022-ல் விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுத்த படிப்பு தொடர்பான தகவல்கள் அந்த விளம்பரத்தில் மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது. அதன்படி, 03.08.2023 தேதியிட்ட கான் பயிற்சி மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
விளம்பரத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வெற்றி பெற்ற 682 பேரில் 674 பேர் கட்டணமில்லா திட்டமான நேர்முகத்தேர்வு திட்டத்தில் பங்கேற்றதாக கான் பயிற்சி மையம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.
ஆனால் 682 பேரில், 8 பேர் மட்டுமே கூடுதல் படிப்புகளுக்கு, அதுவும் முந்தைய ஆண்டுகளில் வழிகாட்டுதல்களைப் பெற்றதாக விசாரணை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மை அவர்களின் விளம்பரங்களில் வெளியிடப்படவில்லை, இதனால் அவர்களின் வெற்றிக்கு தங்கள் நிறுவனம் காரணம் என்று கூறி நுகர்வோரை ஏமாற்றியுள்ளது.
***
ANU/SMB/IR/AG/KRS
(Release ID: 1975952)
Visitor Counter : 134