நித்தி ஆயோக்

வளர்ச்சி மற்றும் வளத்திற்கு அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகம் குறித்த நித்தி ஆயோகின் பயிலரங்கம்

Posted On: 07 NOV 2023 11:08AM by PIB Chennai

"வளர்ச்சி மற்றும் வளத்திற்கு அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகம்" என்ற தலைப்பில் நித்தி ஆயோக் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இது வளர்ச்சி மற்றும் வளத்திற்கு அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகம், நெகிழ்வான விநியோகத் தொடர்  ஆகிய துறைகளில் புதுதில்லி ஜி20 தலைவர்களின் பிரகடனத்தின் (என்.டி.எல்.டி) விளைவுகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான அவசியத்தை எடுத்துக்காட்டியது.

அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் வளத்திற்கு வலுவான, நிலையான, சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகத்தைப் பின்பற்றுவதை வலியுறுத்தும் இந்தியாவின் ஜி 20 உச்சிமாநாட்டின் கீழ் புதுதில்லி ஜி20 தலைவர்களின் பிரகடனத்தின் (என்.டி.எல்.டி) தொடர்ச்சியாக இந்தப் பயிலரங்கிற்குஏற்பாடு செய்யப்பட்டது.

நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பி.வி.ஆர்.சுப்ரமணியம் தனது தலைமை உரையில், வளர்ச்சி,மற்றும் வளத்தின் இயந்திரமாக வர்த்தகத்தை எளிதாக்கும் பாரபட்சமற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தக அமைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும், உலகளாவிய மதிப்புத் தொடர்களில்  இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் வர்த்தக அமைப்புகளுக்கு விரைவாக தகவமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நித்தி ஆயோகின் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் வீர்மானி, 'உலகளாவிய மதிப்புத் தொடர்களை வரைபடமாக்குதல்' என்ற தலைப்பிலான முதல் அமர்வில் உரையாற்றினார், மேலும் தொழிலாளர்-தீவிர விநியோகத் தொடர்கள், கொள்கை உருவாக்கம், வரிவிதிப்பு முறையை எளிதாக்குவதற்கான நிறுவன காரணிகள், குறிப்பாக எம்.எஸ்.எம். நிறுவனங்களுக்கு பணம் செலுத்துதல், பணத்தைத் திரும்பப் பெறுதல்,   ஏற்றுமதிக் கடன் முறையை ஒருங்கிணைத்தல் போன்ற முக்கியப் பகுதிகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

திறமையான விநியோகத் தொடர்களுக்கான தளவாடங்களை வலுப்படுத்துதல், போட்டித்தன்மையை மேம்படுத்த பரிமாற்ற விகித மேலாண்மை, பன்னாட்டு நிறுவனங்களின் உத்திப்பூர்மான தலையீட்டைப் பயன்படுத்துதல், ஒட்டுமொத்த மூல விதிகளை வழங்குதல், சாத்தியமான போட்டிப்  பிரிவுகளை அடையாளம் காணுதல், வெளிப்படையான மற்றும் கண்டறியக்கூடிய ஜி.வி.சி.க்கள், ஸ்டார்ட்அப்களை வரைபடமாக்குதல்தொழில் கொள்கையை வர்த்தகக் கொள்கையுடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் 'உலகளாவிய மதிப்புத் தொடர்களை வரைபடமாக்குதல்' குறித்த அமர்வு கவனம் செலுத்தியது.

'வளர்ச்சிக்கான அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகத்தை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான இரண்டாவது அமர்வுக்கு நித்தி ஆயோகின் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் தலைமை தாங்கினார். ஓரளவு வளர்ச்சியடைந்த நாடுகளின் திறனை வலுப்படுத்துதல்உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அமர்வு எடுத்துக்காட்டியது.

சுங்கவரி அல்லாத தடைகளை குறைத்தல்; குறிப்பாக வளரும் மற்றும் ஓரளவு வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள எம்.எஸ்.எம்..க்களுக்கு உதவி-வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுதல், உள்கட்டமைப்பு, திறன்கள் மற்றும் தரவு உரிமை ஆகிய மூன்று துறைகளில் டிஜிட்டல் உள்ளடக்கம், நிலையான அமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம்; வெளிப்படைத்தன்மைபருவ நிலை கொள்கைகளை வர்த்தக அமைப்புகளில் இணைத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

'அனைவரையும் உள்ளடக்கிய வர்த்தகத்திற்கான சவால்களை எதிர்கொள்வது' என்ற பயிலரங்கின் நிறைவு அமர்வுக்கு உலக வர்த்தக அமைப்பின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ஹர்ஷ வர்தன சிங் தலைமை தாங்கினார். இந்தியாவின் பாரம்பரிய ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து அவர் கவனத்தை ஈர்த்தார்வர்த்தகத்தில் பெண் தொழிலாளர் சக்தி பங்கேற்பு அதிகரிப்பு; விநியோகத் தொடர்வர்த்தகத்தில் மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் விவாதங்கள் நடைபெற்றன.

 

*****

ANU/SMB/BS/KPG



(Release ID: 1975308) Visitor Counter : 87