மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் டிபி வேர்ல்ட் நிறுவனத்தின் தலைவர் திரு சுல்தான் அகமது பின் சுலைம் முன்னிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான திறன் மேம்பாடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது
प्रविष्टि तिथि:
03 NOV 2023 4:56PM by PIB Chennai
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், துபாயில் டிபி வேர்ல்ட் நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு சுல்தான் அகமது பின் சுலைமைச் சந்தித்தார். அப்போது இந்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் டிபி வேர்ல்டின் துணை நிறுவனமான வீ ஒன் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இந்திய இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் இந்திய இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். இந்தியா பரந்த அளவிலான திறமையாளர்களின் களஞ்சியமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று அவர் கூறினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் திரு. சுஞ்சய் சுதிர், துபாய்க்கான இந்தியத் துணைத் தூதர் திரு சதீஷ் குமார் சிவன், என்.எஸ்.டி.சி எனப்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு வேத் மணி திவாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் 105 சிபிஎஸ்இ இணைப்பு பள்ளிகளின் முதல்வர்களுடன் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்துரையாடினார். இந்தப் பள்ளிகள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020 இன் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவதாக அவர் தெரிவித்தார். நமது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகள் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் வழிகள் குறித்து திரு தர்மேந்திரப் பிரதான் எடுத்துரைத்தார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட இந்திய பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்களில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளனர். இந்த பள்ளிகளின் நீண்டகால கோரிக்கையை அடுத்து, சிறந்த நிர்வாகத்திற்காகவும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காகவும் துபாயில் ஒரு பிராந்திய அலுவலகத்தை திறக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
(Release ID: 1974482)
****
AD/PLM/KRS
(रिलीज़ आईडी: 1974569)
आगंतुक पटल : 174