மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை - தேசிய அறிவியல் அறக்கட்டளையின் இரண்டு நாள் இந்திய-அமெரிக்க கூட்டுப் பயிலரங்கம்
प्रविष्टि तिथि:
03 NOV 2023 9:34AM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையும் இணைந்து மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கை புதுதில்லியில் நடத்துகின்றன.
மத்திய மின்னணுவியல் துறைச் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன் நேற்று (02-11-2023) இந்தப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்திய மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
ஆராய்ச்சிகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான செயலாக்க ஏற்பாட்டு நடைமுறையில் மத்திய மின்னணுவியல் துறையும் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையும் மே 2023-ல் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கூட்டு செயல்பாடு, ஆராய்ச்சி வாய்ப்புகளில், குறிப்பாக பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் புதுமைக் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும். இந்த அம்சம், ஜூன் 2023-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்திய அரசும் அமெரிக்காவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
முதல் கூட்டுப் பயிலரங்கில், குறைக்கடத்திகள் தொடர்பான ஆராய்ச்சி, அடுத்த தலைமுறை தகவல்தொடர்பு தொழில்நுட்பங்கள், இணையதளப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்புகள் ஆகிய துறைகளில் முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படும்.
பயிலரங்கின் முதல் நாளில் இரு நாடுகளிலிருந்தும் 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், மத்திய மின்னணுவியல் துறை அதிகாரிகள், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் பிரதிநிதிகள், புத்தொழில் நிறுவனத்தினர், அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் பங்கேற்றனர்.
******
ANU/SMB/PLM/KV
(रिलीज़ आईडी: 1974403)
आगंतुक पटल : 166