கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
முதல் சர்வதேச கப்பல் 'சோஸ்டா செரீனா'வின் உள்நாட்டு பாய்மரப் பயணத்தை திரு சர்பானந்தா சோனோவால் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
02 NOV 2023 5:45PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால், இந்தியாவில் முதல் சர்வதேச கப்பலான 'கோஸ்டா செரீனா'வின் உள்நாட்டு பாய்மரப் பயணத்தை நாளை மும்பையில் தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச சுற்றுலாவை விட உள்நாட்டு சுற்றுலாவை விரும்புமாறு நடுத்தர வர்க்கத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளையடுத்து தொடங்கப்பட்ட 'உள் நாட்டை பாருங்கள் ' என்ற முன்முயற்சி இத்தகைய கப்பல் பயண முயற்சிகளை ஊக்குவிக்கிறது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவை உலக வரைபடத்தில் கொண்டு வருவதில் மிகவும் கவனம் செலுத்துகிறது.
அமைச்சகம் ஏற்பாடு செய்த உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 இல், 2047 க்குள் இந்தியாவில் 50 மில்லியன் கப்பல் பயணிகள் என்ற இலக்கை எட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா மிகப்பெரிய திறனைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமானதாகத் தெரிகிறது.
கோஸ்டா க்ரூஸஸ் தனது அடுத்த 2 மாத பயணங்களில் சுமார் 45,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடற்பரப்பில் இந்தியர்களுக்கு சர்வதேச பயண அனுபவம் மிகப்பெரிய நன்மையாகும்.
ANU/AD/BS/KRS
(रिलीज़ आईडी: 1974265)
आगंतुक पटल : 197