நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரித் துறை, செப்டம்பர் மாதத்தில் 16.1% வளர்ச்சியை எட்டியுள்ளது.

Posted On: 02 NOV 2023 12:52PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023 செப்டம்பர் மாதத்திற்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி, நிலக்கரித் துறையின் குறியீட்டெண் 16.1% வளர்ச்சியுடன் 148.1 புள்ளிகளை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் 2023 தவிர கடந்த 14 மாதங்களில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும்.

சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள்எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை இந்தக் குறியீடு அளவிடுகிறது.

2023 செப்டம்பரில் நிலக்கரி உற்பத்தி 67.27 மில்லியன் டன்னை எட்டியது.  இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 58.04 மில்லியன்  டன் என்ற அளவை விட அதிகமாகும். அதாவது,  15.91% அதிகரிப்பைக் குறிக்கிறது. நிலக்கரித் தொழில் துறை ஏப்ரல் 2023-ல் 9.1% வளர்ச்சியைப் பதிவு செய்தது, இது செப்டம்பர் 2023-ல் 16.1% ஆக உயர்ந்தது.

நிலக்கரித் துறையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, எட்டு முக்கியத் தொழில்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஆகியவை நிலக்கரி அமைச்சகத்தின் தொடர்ச்சியான  முன்முயற்சிகளுக்கு  சான்றாகும். இந்த முயற்சிகள் "தற்சார்பு இந்தியா" என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து, தன்னிறைவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை நோக்கிய தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கின்றன.

***

ANU/PKV/SMB/KV



(Release ID: 1974085) Visitor Counter : 105