பிரதமர் அலுவலகம்
ஹரியானா நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
Posted On:
01 NOV 2023 11:59AM by PIB Chennai
ஹரியானா மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் ஹரியானா எப்போதும் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். புதுமைக் கண்டுபிடிப்புகள் துறையில் ஹரியானா இளைஞர்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களையும் அவர் பாராட்டியுள்றயளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஹரியானா மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்துகள். விவசாயம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் இந்த மாநிலம் எப்போதும் நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இங்குள்ள இளைஞர்கள் புதுமை உலகில் ஜொலிக்கின்றனர். வளர்ச்சியின் ஒவ்வொரு அளவுகோலிலும் இந்த மாநிலம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
----
ANU/PKV/PLM/KPG
(Release ID: 1973716)
Visitor Counter : 113
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam