தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவாவில் நடைபெறவுள்ள 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு சர்வதேச நடுவர் குழு அறிவிப்பு
கோவாவில் நடைபெறவுள்ள 54 வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) சர்வதேச நடுவர்களாக உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இவ்விழாவுக்கு 105 நாடுகளில் இருந்து 2926 பதிவுகள் வந்திருப்பது சாதனையாகும்.
'சர்வதேசப் போட்டி' என்பது முக்கியமான வகைகளில் பாராட்டைப் பெறும் 15 திரைப்படங்களின் தேர்வாகும். சர்வதேச நடுவர் குழு வெற்றியாளரைத் தேர்வு செய்யும்
தங்க மயில் உள்ளிட்ட விருதுகள், சிறந்த திரைப்படம் தவிர சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறப்புப் பரிசு ஆகிய பிரிவுகளிலும் வெற்றியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்வார்கள்.
சர்வதேச நடுவர் குழுவின் தலைவராக திரைப்படத் தயாரிப்பாளர் திரு சேகர் கபூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜோஸ் லூயிஸ் அல்கைன் (ஒளிப்பதிவாளர்), ஜெரோம் பைலார்ட் (திரைப்படத் தயாரிப்பாளர்), கேத்தரின் டசார்ட் (திரைப்படத் தயாரிப்பாளர்), திருமதி ஹெலன் லீக் (திரைப்பட தயாரிப்பாளர்) உள்ளிட்ட சர்வதேசத் திரை பிரபலங்கள் இதன் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2023 நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும். தெற்காசியாவின் மிகப்பெரிய உலகத் திரைப்படக் கொண்டாட்டமான இதில் சர்வதேச மற்றும் தேசிய திரைப்படத் துறை திறமையாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்கள் பங்கேற்பார்கள்.
****
ANU/SMB/ PLM/KPG
(Release ID: 1973437)
Visitor Counter : 159