உள்துறை அமைச்சகம்
2023 ஆம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சரின் "சிறப்பு செயல்பாட்டுப் பதக்கம்" 4 சிறப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு காவல்துறையில் 19 பேருக்கு சிறப்பு செயல்பாட்டுப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது
Posted On:
31 OCT 2023 11:26AM by PIB Chennai
2023 ஆம் ஆண்டிற்கான "மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு செயல்பாட்டு பதக்கம்" 4 சிறப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிக அளவிலான திட்டமிடல், நாடு,மாநிலம், யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் பெரிய பிரிவுகளின் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் இந்த பதக்கம் 2018 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை பாதுகாப்பு நடவடிக்கை, ஆயுதக் கட்டுப்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் சிறப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்படும்.
இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31அன்றுஅறிவிக்கப்படுகிறது. ஓராண்டில் பொதுவாக 3 சிறப்பு நடவடிக்கைகள் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்படுகின்றன, மேலும் அசாதாரண சூழ்நிலைகளில், மாநில, யூனியன் பிரதேச காவல்துறையை ஊக்குவிப்பதற்காக கூடுதலாக 5 சிறப்பு நடவடிக்கைகள் வரை விருது வழங்கப்படலாம்.
தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுவோர் விவரம்;
1. அரா. அருளரசு காவல்துறை கண்காணிப்பாளர்
2. என். ஸ்டீபன் .ஜேசுபாதம் காவல்துறை கண்காணிப்பாளர்
3. ஜி.கார்த்திகேயன் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்
4. வி. சரவணக்குமார் காவல் துறை கண்காணிப்பாளர்
5. டி.வீமராஜ் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்
6. .சி. கோகிலா காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்
7. பி. சுந்தரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்
8. கே. மஞ்சுளா காவல் ஆய்வாளர்
9. பி.எஸ். சுந்தர் குமார் காவல் ஆய்வாளர்
10.. ஆர்.பிரேமா காவல் ஆய்வாளர்
11. ஜி. சங்கமராயன் சப் இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்ப பிரிவு)
12. D. ஞானேஸ்வரன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
13. வி. சிற்றரசு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
14. எஸ்.பிரசாத் தலைமைக் காவலர்
15. ஜி. டில்லிபாபு தலைமைக் காவலர்
16. கே. சரிதா தலைமைக் காவலர்
17. ஆர். கிஷோர் குமார் காவலர்
18. வி.பாஸ்கர் காவலர்
19. கே. ஜான் பெனடிட் காவலர்
விருது பெறுவோரின் முழுமையான பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்; https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/oct/doc20231031265401.pdf
******
ANU/SMB/BS/KPG
(Release ID: 1973416)
Visitor Counter : 156
Read this release in:
Telugu
,
Malayalam
,
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati