எரிசக்தி அமைச்சகம்
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் மின்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்பு
Posted On:
31 OCT 2023 12:42PM by PIB Chennai
இந்தியாவின் இரும்பு மனிதர் 'சர்தார்' வல்லபாய் படேலின் பிறந்த நாளில் நாடு தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தில் எரிசக்தி அமைச்சகம் அதனுடன் இணைந்து ஒற்றுமைக்கான ஓட்டத்தை நடத்தியது.
சர்தார்' வல்லபாய் படேலின் 148-வதுபிறந்த நாளான இன்று புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், சுதந்திரத்திற்குப் பிறகு சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகித்த 'சர்தார்' வல்லபாய் படேலின் நினைவாக தேசிய ஒற்றுமை தினத்தை கொண்டாடுமாறு ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் வலியுறுத்தினார். முன்னதாக, மின்சக்தி அமைச்சகம் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளின் அதிகாரிகளுடன் அமைச்சர் ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க: சர்தார் வல்லபாய் படேல்: தேசத்தை ஒருங்கிணைத்த மனிதர் என்ற இந்த இணைப்பை பார்க்கவும்; https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/oct/doc2021103031.pdf
******
ANU/SMB/BS/KPG
(Release ID: 1973329)
Visitor Counter : 137