விவசாயத்துறை அமைச்சகம்

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத் தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கு; மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தொடங்கி வைத்தார்

Posted On: 30 OCT 2023 2:52PM by PIB Chennai

தெற்காசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத்  தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரண்ட்லாஜே தில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைத்  தடுப்பது குறித்த சர்வதேச பயிலரங்கை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜெர்மனியின் துனன் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வில் உரையாற்றிய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்  ஷோபா கரண்ட்லாஜே, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தொடர்பான ஒரு முக்கியமான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினையை நிவர்த்தி செய்ய .சி..ஆர் மற்றும் ஜெர்மனியின் துனென் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டினார்.

உலகம் முழுவதும் சுமார் 3 பில்லியன் டன் உணவு வீணாகிறது என்று அவர் கூறினார். உணவு இழப்பு மற்றும் வீணாகும்  பிரச்சினையின் அளவை அவர் கோடிட்டுக் காட்டினார். வளர்ந்த, வளரும் நாடுகளின் நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், நடைமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும், இதன் மூலம் உலகம் முழுவதும் ஏற்படும் இழப்புகள், வீண் விரயங்களை சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளைப் பயன்படுத்தி குறைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினரிடையே விழிப்புணர்வைப் பரப்புவதில் சமூக அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்றும், உணவு கழிவுகளைக் குறைப்பதற்கான முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உணவு இழப்பு என்பது நுகர்வோருக்கு நேரடி இழப்பு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் ஆதரவளிக்கும் பொருளாதாரங்களிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

.சி..ஆரின் துணை இயக்குநர் ஜெனரல்  டாக்டர் எஸ்.கே.சவுத்ரி, ஜெர்மனியின் துனென் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஸ்டீபன் லாங்கே, .சி..ஆரின் துணை தலைமை இயக்குநர்  (.ஜி. இன்ஜினியரிங்), டாக்டர் எஸ்.என்.ஜா மற்றும் இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 120 பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

**

ANU/PKV/BS/KPG



(Release ID: 1973063) Visitor Counter : 89