நிலக்கரி அமைச்சகம்

வணிக ரீதியான நிலக்கரி சுரங்க நிதிக்கு நிலக்கரி அமைச்சகம் புதிய முயற்சி

Posted On: 28 OCT 2023 2:28PM by PIB Chennai

இந்தியாவில் நிலக்கரித் துறையை தாராளமயமாக்க நிலக்கரி அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முன்முயற்சியின்  வாயிலாக வணிக நிலக்கரி சுரங்க முறை  அறிமுகப்படுத்தப்பட்டது. நிலக்கரி விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. பரந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிகள் மற்றும் நெகிழ்வான ஏல விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் முதல் தவணை ஜூன் 2020 இல் தொடங்கியதைத் தொடர்ந்து, நிலக்கரி அமைச்சகம் ஏழு தவணைகளில் 91 நிலக்கரி சுரங்கங்களை வெற்றிகரமாக ஏலம் விட்டுள்ளது.

இந்த ஏலங்களில் பரந்த பங்களிப்பை அதிகரிக்க, அமைச்சகம் நிலக்கரி துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி சுரங்கங்களை இயக்க நிதி உதவி பெறுவது ஒரு முக்கிய கவனம் செலுத்தும் பகுதியாகும். வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவியைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களை தொழில்துறை எடுத்துரைத்துள்ளது.

சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ஈ.எஸ்.ஜி) விதிமுறைகளின் அதிகரித்து வரும் உத்வேகத்துடன்பெரும்பாலான வங்கிகள், நிதி நிறுவனங்கள் நிலக்கரி தொடர்பான திட்டங்களில் ஈடுபட தயக்கம்  காட்டுகின்றன.

இந்தச் சவால்களை எதிர்கொள்ளவும், நிதி செயல்முறையை முறைப்படுத்தவும், அமைச்சகம் "இந்தியாவில் வணிக நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதியளித்தல்" குறித்த 'பங்கெடுப்பாளர்களின் ஆலோசனையை' நடத்தியது.  இந்த நிகழ்வில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுதாரர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

வணிக ரீதியான நிலக்கரி சுரங்கத்திற்கு நிதியளிப்பது தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வது மற்றும் அனைத்து பங்கெடுப்பாளர்களிடம் இருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சேகரிப்பதை இந்த ஆலோசனை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த ஆலோசனையின் போது, விரிவான வணிகத் திட்டங்கள் மூலம் திட்ட நம்பகத்தன்மை மற்றும் பங்கு உட்செலுத்துதல் ஆகியவை நிரூபிக்கப்பட்டதால், நிலக்கரி சுரங்கங்களுக்கு நிதியளிக்க வங்கிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

எதிர்காலத்தில், நிலக்கரி முதன்மை எரிசக்தி ஆதாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை உணர்ந்த நிலக்கரி அமைச்சகம், நிலக்கரித் துறையை 'உள்கட்டமைப்புத் துறையின்' கீழ் வகைப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு நிதி சேவைகள் துறையை (டி.எஃப்.எஸ்) கேட்டுக்கொண்டுள்ளது.      

***

ANU/PKV/BS/DL



(Release ID: 1972534) Visitor Counter : 103