பிரதமர் அலுவலகம்
காசி லகா மேளாவின் பாரத் மிலாப் காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 OCT 2023 7:41PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காசி லகா மேளாவின் பாரத் மிலாபில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வை சந்தன் சம்ஸ்கிருதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இது ஐந்து நூற்றாண்டு பழமையான பாரம்பரியம் என்று தெரிவித்தார். காசியின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இந்தப் பாரம்பரியம் குறித்து அவர் தனது தனித்துவப் பெருமையை வெளிப்படுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"காசியில் லகா மேளாவின் கீழ் நடத்தப்படும் பாரத் மிலாப் இந்தியாவின் சனாதன கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி, ஸ்ரீ ராமரின் பக்தர்களை மீண்டும் உணர்ச்சிவசப்பட வைத்தது. காசி தொகுதி எம்.பி.,யான நான், இந்தப் பாரம்பரியத்தில் பெருமைப்படுகிறேன்.”
***
(Release ID: 1971057)
ANU/PKV/SMB/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1972205)
வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam