பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 24 OCT 2023 9:43PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
 
கதுனியாவின் அர்ப்பணிப்பும், சிறந்த செயல்திறனும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்று அவர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: 


"ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் சிறப்பான  வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், சிறந்த  செயல்திறனும் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.”

AD/PKV/BR/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1970658) வருகையாளர் எண்ணிக்கை : 144