ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0-ன் கீழ் பணியிடத்தை சீரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2023 11:58AM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 3.0 இல் பணியிடத்தில் தேவையற்ற பொருட்களை அகற்றுதல்  மற்றும் உகந்ததாக்குவதில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.  சிறப்பு இயக்கம் 3.0 இல் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு இலக்கை  அடைய அமைச்சகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

கோப்புகளை சீரமைப்பது தொடர்பான சிறப்பு இயக்கத்தின் மூன்றாவது வாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மறுஆய்வு செய்யப்பட வேண்டிய 305 கோப்புகளில், 161 கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, மதிப்பாய்வு செய்யப்பட்ட 161 கோப்புகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தூய்மையை ஊக்குவிப்பதற்கும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் கூடிய இந்த சிறப்பு இயக்கம் வரும்  31 ஆம் தேதி வரை தொடரும்.

***

ANU/PKV/BS/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1969667) வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Kannada