சுரங்கங்கள் அமைச்சகம்

சிறப்ப பிரச்சாரம் 3.0 இன் கீழ் சுரங்க அமைச்சகம் மக்களை இயற்கையுடன் இணைக்கிறது

Posted On: 21 OCT 2023 10:24AM by PIB Chennai

சுரங்க அமைச்சகம், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அதன் கள அமைப்புகள் நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளன. மேலும் சிறப்பு பிரச்சாரம் 3.0 இன் கீழ் ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான வழிகளில் இயற்கைக்கு திரும்பக் கொடுப்பதை வலியுறுத்தியுள்ளன.

 

பிரச்சாரத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள்பழைய கோப்புகள் / பதிவுகளை ஆய்வு  செய்வதற்காக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. விதிகள் மற்றும் செயல்முறைகளைத் தளர்த்துதல், பொதுமக்களின் குறைகளைத் தீர்த்தல், அமைச்சகங்களுக்கு இடையிலான குறிப்புகள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட குறிப்புகள் ஆகியவற்றில் 100% சாதித்துள்ளது. இதுதவிர, 75 சதவீத தூய்மைப் பணிகள் முடிவடைந்து விட்டன.

 

சுமார் 50,000 சதுர அடி இடத்தை விடுவிப்பதில் வெற்றி பெற்ற  பின்னர், கழிவுகள், குப்பைகளை அகற்றுவதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.1.47 கோடி வருவாய் ஈட்டியது. இதனைத் தொடர்ந்துஅமைச்சகமும் அதன் துணை அமைப்புகளும் இந்த பிரச்சாரத்தை இயற்கை, பல்லுயிர் மற்றும் பொது மக்களை சென்றடைய பயன்படுத்தியுள்ளன. பறவைகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ தாவரங்களுடன் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

சுரங்க அமைச்சகம் மற்றும் அதன் அமைப்புகள் ஊழியர்களுக்கும் சமூகத்திற்கும் பணி  அனுபவத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு பிரச்சாரம் 3.0 ஐ ஒரு தொடக்க தளமாக மாற்ற முற்றிலும் உறுதிபூண்டுள்ளன.

***

ANU/PKV/DL



(Release ID: 1969662) Visitor Counter : 81