சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தில்லி அமிர்தசரஸ் கத்ரா விரைவுச் சாலை, பஞ்சாபில் அமிர்தசரஸ் புறவழிச்சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார்.

Posted On: 19 OCT 2023 5:07PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று பஞ்சாபில் தில்லி-அமிர்தசரஸ்-கத்ரா பசுமை விரைவுச்சாலை, அமிர்தசரஸ் புறவழிச் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பஞ்சாப் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு ஹர்பஜன் சிங், அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு குர்ஜித் சிங் அவுஜ்லா ஆகியோரும் உடனிருந்தனர்.

 

பஞ்சாபில் ரூ.29,000 கோடி செலவில் 5 பசுமை மற்றும் பொருளாதார வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தில்லி - அமிர்தசரஸ்-கத்ரா இடையே ரூ.40,000 கோடி செலவில் 669 கி.மீ பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமானத்தின் மூலம், தில்லியிலிருந்து அமிர்தசரஸை 4 மணி நேரத்திலும், தில்லியில் இருந்து கத்ராவை 6 மணி நேரத்திலும் அடையலாம். தற்போது, தில்லி முதல் கத்ரா வரையிலான தூரம் 727 கி.மீ ஆகும், இந்த பாதையின் கட்டுமானத்தின் மூலம் தூரம் 58 கி.மீ குறையும்.

 

தில்லியில் உள்ள கே.எம்.பி.யில் தொடங்கி, ஹரியானாவில் 137 கி.மீ தூரத்திற்கு இந்த விரைவுச்சாலை அமைக்கப்படுகிறது. பஞ்சாபில் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் 399 கி.மீ ஆகும், இதில் 296 கி.மீ பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் அதிவேக நெடுஞ்சாலையின் தொலைவு 135 கிலோ மீட்டராகும். இதில்  120 கி.மீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாபில், பாட்டியாலா, சங்ரூர், மலேர்கோட்லா, லூதியானா, ஜலந்தர், கபுர்தலா, குருதாஸ்பூர் போன்ற தொழில்துறை பகுதிகள் வழியாக இந்த விரைவுச்சாலை செல்லும்.

 

பியாஸ் ஆற்றின் மீது ஆசியாவின் மிக நீளமான 1300 மீட்டர் நீளமுள்ள கேபிள் பாலம் இந்த நடைபாதையின் முக்கிய அம்சமாகும்.

****

(Release ID: 1969110)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 1969196) Visitor Counter : 66