ரெயில்வே அமைச்சகம்
'நன்ஹே ஃபாரிஸ்டே' நடவடிக்கை மூலம் 2023 செப்டம்பரில் ரயில்வே பாதுகாப்புப் படை 895 குழந்தைகளை (சிறுவர்-573 & சிறுமிகள்-322) மீட்டது
Posted On:
18 OCT 2023 2:37PM by PIB Chennai
ரயில்வே சொத்துக்கள், பயணிகள் நடமாடும் பகுதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு பொறுப்பு ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு பாதுகாப்பான, மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதற்காக இப்படை 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. இது இந்திய ரயில்வே தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சரக்கு போக்குவரத்து சேவையை வழங்க உதவுகிறது. நாடு முழுவதும் பரவியுள்ள ரயில்வேயின் பெரும் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஆர்.பி.எஃப் சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. 2023 செப்டம்பர் மாதத்தில் ஆர்பிஎஃப் மேற்கொண்ட சாதனைகள் பின்வருமாறு -
குழந்தைகளை மீட்பது மற்றும் நன்ஹே ஃபரிஸ்டே நடவடிக்கை: குடும்பத்திலிருந்து பல காரணங்களால் காணாமல்போன, பிரிந்துபோன குழந்தைகளை மீட்டு மீண்டும் சேர்ப்பதில் ஆர்.பி.எஃப் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பாக, இந்திய ரயில்வேயில் 'நான்ஹே ஃபரிஸ்டே' நடவடிக்கை தொடங்கப்பட்டது, இந்த இயக்கத்தின் கீழ், -2023 செப்டம்பர் மாதத்தில் இந்திய ரயில்வேயுடன் தொடர்பு கொண்ட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 895-க்கும் மேற்பட்ட குழந்தைகள் (சிறுவர்கள் -573 மற்றும் சிறுமி -322) மீட்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஆள்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை; ஆள் கடத்தல்காரர்களின் தீய திட்டங்களை திறம்பட எதிர்கொள்வதற்காக, ஆர்.பி.எஃப் இன் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் இந்திய ரயில்வேயில் செயல்படுகின்றன. ஆள் கடத்தலைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள முகமைகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இவை தொடர்ந்து தொடர்பில் உள்ளன. கடத்தப்படும் குழந்தைகளை மீட்பதில் அவர்களுக்கு உதவியுள்ளன. 2023 செப்டம்பர் மாதத்தில், 14 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் 29 நபர்கள் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
"ஜீவன் ரக்சா" நடவடிக்கை:- ஆர்.பி.எஃப்-ன் எச்சரிக்கை மற்றும் விரைவான நடவடிக்கை காரணமாக, 2023 செப்டம்பர் மாதத்தில் 'ஜீவன் ரக்சா' நடவடிக்கையின் கீழ், நடைமேடைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் ரயில்களில் மோதுவதற்கு அருகில் வந்த 265 பயணிகளின் உயிர்களை ஆர்.பி.எஃப் குழு காப்பாற்றியது.
மகளிர் பாதுகாப்பு:- மகளிர் பயணிகளின் பாதுகாப்பு இந்திய ரயில்வேயின் முக்கிய கவலையாக உள்ளது. இது தொடர்பாக, நீண்ட தூர ரயில்களில் மகளிர் பயணிகளுக்கு, குறிப்பாக தனியாக பயணம் செய்பவர்களுக்கு அல்லது குற்றங்களால் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பாதுகாப்பை வழங்க "மேரி சஹேலி" என்ற முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், 231 மேரி சஹேலி குழுக்கள் 13071 ரயில்களில் பணியில் ஈடுபட்டன. 2023 செப்டம்பர் மாதத்தில் 421198 மகளிர் பயணிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அளித்தன.
மேலும், 2023 செப்டம்பரில் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 6033 பேர் மீது ஆர்பிஎஃப் நடவடிக்கை எடுத்தது.
இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை மற்றும் ஆபரேஷன் "உப்லப்த்" நடவடிக்கை: இது தொடர்பாக 2023 செப்டம்பர் மாதத்தில் 405 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.36.43 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவசரகால நடவடிக்கை மற்றும் 'யாத்ரி சுரக்சா நடவடிக்கை': பாதிக்கப்பட்ட பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்வதற்கும், உடனடி உதவிக்கும், பயணிகள் ரயில் மதாத் இணையதளத்தில் அல்லது உதவி எண் 139 (அவசரகால மீட்பு ஆதரவு அமைப்பு எண் 112 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது) மூலம் புகார் அளிக்கலாம். 2023 செப்டம்பர் மாதத்தில், 28,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
***
ANU/PKV/IR/RS/KPG
(Release ID: 1968758)
Visitor Counter : 139