சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாகாலாந்து மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்
Posted On:
14 OCT 2023 1:44PM by PIB Chennai
நாகாலாந்தின் கோஹிமாவில் நாகாலாந்து மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நாகாலாந்து முதல்வர் திரு நெய்பியூ ரியோ முன்னிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மாண்டவியா, "என்.ஐ.எம்.எஸ்.ஆர் என்பது ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமல்ல, அது ஒரு ஆராய்ச்சி நிறுவனமும் கூட. இது மருத்துவக் கல்வியை வழங்குவதற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், நாகா மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளையும் தீர்க்கும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், நாகாலாந்தில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். வெறும் 9 ஆண்டுகளில், நாகாலாந்தில் எம்.பி.பி.எஸ் இடங்கள் 64,000 லிருந்து 1,60,000 ஆக உயர்ந்துள்ளன என்றார். "இதேபோல் முதுநிலை இடங்களும் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன", என்றும் அவர் கூறினார்.
நாகாலாந்தின் துணை முதலமைச்சர் திரு டி.ஆர்.ஜெலியாங் மற்றும் நாகாலாந்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு பி.பைவாங் கொன்யாக் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
***
ANU/AD/BS/DL
(Release ID: 1967671)
Visitor Counter : 105