மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

இந்திய கோழிப்பண்ணைகள் பறவைக் காய்ச்சலில் இருந்து விடுபடுவதாக சுய பிரகடனம் செய்ய உலக விலங்குகள் நல அமைப்பு ஒப்புதல்

Posted On: 14 OCT 2023 1:14PM by PIB Chennai

சென்னையில் இருந்து சாகர் பரிக்ரமா நிகழ்ச்சியின் அடுத்த கட்டத்தை தொடங்கி  வைக்கும் நிகழ்வுக்கான பயணத்தின்போது மத்திய அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ரூபாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ஒரு பெரிய செய்தி என்றும், நமது கோழிப்பண்ணை துறையை மாற்றியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் கோழி வளர்ப்புத் தொழிலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் அம்சமாக ,குறிப்பிட்ட கோழிப்பண்ணை நிர்வாக அமைப்பில் அதிக நோய்க்கிருமிகளைக் கொண்ட பறவைக் காய்ச்சலிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கான இந்தியாவின் சுய அறிவிப்புக்கு விலங்குகள் நலத்திற்கான உலக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் உயிரியல் பாதுகாப்பின் உயர் தரத்தை பராமரிப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இந்த சாதனை ஒரு சான்றாகும்.

இந்தியாவில் பறவைக் காய்ச்சல்

பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் அதிக நோய்க்கிருமிகளைக் கொண்ட ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (எச்.பி.ஏ.ஐ) இந்தியாவில் முதன்முதலில் பிப்ரவரி 2006 இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கண்டறியப்பட்டது.

2022-23 நிதியாண்டில், இந்தியா 64 நாடுகளுக்கு கோழி மற்றும் கோழி பொருட்களை ஏற்றுமதி செய்து, 134 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டியது. இந்த சுய பிரகடனத்தின் ஒப்புதல்உலக சந்தையில் இந்தியக் கோழிகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

ANU/AD/BS/DL



(Release ID: 1967648) Visitor Counter : 93