பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்பா பாடலுக்கு இசை அமைத்த கலைஞர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்

प्रविष्टि तिथि: 14 OCT 2023 11:57AM by PIB Chennai

பல ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய கர்பா பாடலுக்கு இசை, ஒலி கோர்ப்பு செய்த கலைஞர்கள் த்வானி பானுஷாலி, தனிஷ்க் பாக்சி மற்றும் ஜேஜஸ்ட்  மியூசிக் குழுவினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார். வரவிருக்கும் நவராத்திரியின் போது ஒரு புதிய கர்பாவைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது :

"பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கர்பாவின் இந்த அழகான பாடலுக்காக இசை, ஒலி கோர்ப்பு செய்த @dhvanivinod, தனிஷ்க் பாக்சி மற்றும் @Jjust_Music குழுவினருக்கு நன்றி. இது பல சம்பவங்களை மீண்டும் நினைவூட்டுகிறது. அதன் பின்னர் நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை, ஆனால் கடந்த சில நாட்களில் மீண்டும் நான் ஒரு புதிய கர்பாவை எழுத முடிந்தது, அதை நான் நவராத்திரியின் போது பகிர்ந்து கொள்ள உள்ளேன் #SoulfulGarba"

***

ANU/AD/BS/DL


(रिलीज़ आईडी: 1967625) आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam