சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்க அமைச்சகத்தின் வெற்றிகரமான சிறப்புத் தூய்மை இயக்கம் 3.0
Posted On:
10 OCT 2023 10:48AM by PIB Chennai
சுரங்க அமைச்சகம் மற்றும் அதன் கள அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் விதிகள் / செயல்முறைகளை எளிதாக்குதல், பதிவேடு மேலாண்மை, பொது மக்கள் குறைகள் மற்றும் பணி இட அனுபவத்தை உயர்த்துதல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள விஷயங்களுக்குத் தீர்வுகாண சிறப்புத்தூய்மை இயக்கம் 3.0 க்கு இலக்குகளை நிர்ணயித்துள்ளன.
சிறப்பு இயக்கம் 3.0 2023 அக்டோபர் 2 அன்று தொடங்கியது மற்றும் 2016 ஆம் ஆண்டின் அணு கனிம சலுகை விதிகள் திருத்தத்தின் மூலம் 27 விதிகளைக் குற்றமற்றதாக்குவதன் மூலம் விதிகள் / நடைமுறைகளை எளிதாக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 100%-ஐ சுரங்க அமைச்சகம் எட்டியுள்ளது.
சிறப்பு இயக்கம் 3.0-ன் முதல் வாரத்தில், அமைச்சகம் நிலுவையில் உள்ள 95.45% பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்துள்ளது மற்றும் பதிவேடுகள் மேலாண்மைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் 52% -ஐ முடித்துள்ளது, மேலும் நேரடிக்கோப்புகளை களையெடுப்பதற்கான இலக்கில் 43%-ஐ எட்டியுள்ளது, இதன் மூலம் சுமார் 9212 சதுர அடி அலுவலகப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நாடு முழுவதும் 344 தூய்மை இயக்கங்களில் 103 மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் இந்த இயக்கக் கட்டத்தில் 100% சாதனையை அடைய அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.
***
ANU/SMB/BR/AG
(Release ID: 1966226)
Visitor Counter : 122