ஆயுஷ்

மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மேற்கு பிராந்தியத்தின் ஆறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிராந்திய ஆய்வுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்

Posted On: 09 OCT 2023 4:52PM by PIB Chennai

தேசிய ஆயுஷ் இயக்கம் குறித் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களுக்குப் பிறகு தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற நான்காவது மண்டல ஆய்வுக் கூட்டத்தில் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நாகர் ஹவேலி, டாமன் & டையூ ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஆயுஷ் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார். மத்திய ஆயுஷ் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய், ஆயுஷ் துறை செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 அப்போது பேசிய திரு சர்பானந்தா சோனோவால், "ஆயுஷ் சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமும், மேம்படுத்துவதன் மூலமும் நாடு முழுவதும் ஆயுஷ் சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தொலைநோக்கு மற்றும் நோக்கங்களுடன் தேசிய ஆயுஷ் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

 

ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்பை வலியுறுத்திய மத்திய அமைச்சர், "மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்" என்று கூறினார்.

 

ஜாம்நகரில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை குஜராத்தில் நிறுவியதன் மூலம் இந்தியாவின் அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சியின் புதிய பாதைகளைத் திறந்துள்ளது என்றும், தேசிய ஆயுஷ் இயக்கம் போன்ற முதன்மை திட்டத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின் நன்மைகள்  அனைத்துப்பகுதிகளையும்  சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றும் கூறினார்.

***

ANU/SM/IR/AG/KRS



(Release ID: 1966139) Visitor Counter : 114