நிதி அமைச்சகம்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது
Posted On:
09 OCT 2023 2:39PM by PIB Chennai
மகாத்மா காந்திக்கு, 'தூய்மையான இந்தியா' என்ற இதயப்பூர்வமான மரியாதையை செலுத்தும் நோக்கில், 2023 செப்டம்பர் 15ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட நிலுவையில் உள்ள கோப்புகளை பைசல் செய்வதற்கான சிறப்பு இயக்கம் 3.0-ல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறது.
நாடு முழுவதும் உள்ள அதன் கள அலுவலகங்களுடன் இணைந்து, 2023 அக்டோபர் 2 முதல் 31வரையிலான இயக்கத்தின் போது அடையாளம் காணப்பட்ட குறிப்புகள் / பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்கிறது.
2023 அக்டோபர் 09 நிலவரப்படி, 31 முக்கிய பிரமுகர்களின் குறிப்புகள், 933 பொதுமக்கள் குறைகள், 357 பொதுமக்கள் குறைகேட்பு மனுக்கள் இத்திட்டத்தின் கீழ் தீர்வு காணப்பட்டுள்ளன. இதுவரை, 1,038 இடங்கள் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், சுமார் 44,000 கோப்புகள் மற்றும் 23,000 மின்-கோப்புகள் மறுஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பழைய, பயன்படுத்தப்படாத உபகரணங்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன. இதனால் கிடைத்த கூடுதல் இடம் இதரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
***
ANU/SMB/IR/AG/KPG
(Release ID: 1966023)
Visitor Counter : 118