நிலக்கரி அமைச்சகம்
ராஜஸ்தானில் மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட 810 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெற்றுள்ளது
Posted On:
09 OCT 2023 12:34PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்திடமிருந்து மின்சக்தி உற்பத்தி 810 மெகாவாட் சோலார் திட்டத்தைப் பெற்றுள்ளது .
ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டம், புகல் வட்டத்தில் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனம் 2000 மெகாவாட் நவீனமுறையில் சூரிய மின் உற்பத்திப் பூங்காவை உருவாக்குவதற்காக இந்நிறுவனம் 2022 டிசம்பரில் விடுத்த 810 மெகாவாட் ஒப்பந்தப்புள்ளியின் முழு திறனையும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்திற்கான விருப்பக் கடிதம் ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் நிகாம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தூய்மையான மற்றும் நீடித்த எரிசக்தி தீர்வுகளுக்கான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் உறுதிப்பாட்டில் இந்த சாதனை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம், ராஜஸ்தானில் மின் திட்டத்தின் திறன் 1.36 ஜிகாவாட் ஆக இருக்கும், இதில் 1.1 ஜிகாவாட் பசுமை மின்சாரம் அடங்கும்.
மேலும் திட்டகாலத்தில் 50 பில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான பசுமை மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் 50,000 டன்னுக்கும் அதிகமான கரியமில வாயு வெளியேற்றம் குறையும்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் எரிசக்தித் துறையில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னோடியாக இருந்து வருகிறது. பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் பெரும் பங்கும், அனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் கணிசமான பங்கும் வகிக்கிறது. மேலும் தகவலுக்கு https://www.nlcindia.in ஐ காணவும்.
***
ANU/SMB/IR/AG/KPG
(Release ID: 1965964)
Visitor Counter : 149