தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

Posted On: 06 OCT 2023 2:36PM by PIB Chennai

 

2018 – 2021, 2021 - 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய - பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா ஏற்கனவே இரண்டு முறை பணியாற்றிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைக் குறித்து, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் கூறுகையில், இது> 50 ஆண்டு பழமை வாய்ந்த அமைப்பின் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது என்றும், இது ஆசிய - பசிபிக் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒலிபரப்பு அமைப்புகளுக்கு இந்தியா மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் கூறினார்.

யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ் 1977-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆசிய - பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனம் தனித்துவமான பிராந்திய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும். இந்நிறுவனத்தின் 21-வது பொது மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்கள் 2023> அதன் தலைவரும் பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கௌரவ் திவிவேதி தலைமையில் மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் 2023, அக்டோபர் 2 முதல் 4 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.

சர்வதேச ஒலிபரப்பு நிறுவனத்தில் மதிப்புமிக்க இப்பதவியை வகிப்பது, இந்தியா மற்றும் பிரசார் பாரதி மீது சர்வதேச ஊடகங்களின் வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமின்றி, ஒலிபரப்புத் துறையில் மேலும் பல மைல்கற்களை அடைய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கிறது. 

***

(Release ID: 1964978

ANU/PKV/SMB/KPG/KRS



(Release ID: 1965077) Visitor Counter : 116