பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிறந்த நிர்வாகம் குறித்த இரண்டு நாள் பிராந்திய மாநாடு ஜெய்ப்பூரில் நாளை தொடங்குகிறது; இத்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருதுகள் இம்மாநாட்டில் வழங்கப்படும்.
प्रविष्टि तिथि:
03 OCT 2023 2:32PM by PIB Chennai
2023 அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறும் பிராந்திய மாநாட்டில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுகள் திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டின் விருது, வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும்.
ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட், மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் தலைமையில் 2 நாள் மாநாட்டை ராஜஸ்தான் அரசு நடத்துகிறது.
இந்த மாநாட்டில் 2022 ஆம் ஆண்டிலிருந்து 7 பிரிவுகளில் 13 விருது பெற்றவர்கள், பிரதமரின் விருது வென்றவர்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த தேசிய மின் ஆளுமை விருது வென்றவர்கள் மற்றும் ராஜஸ்தானில் சிறந்த நிர்வாக நடைமுறைகளை வழங்குவார்கள். விருது பெற்றவர்களின் அனுபவப் பகிர்வு அமர்வுகளுடன் கூடுதலாக "நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்தல்" மற்றும் "நிர்வாகத்தில் தொழில்நுட்பம்" என்ற தலைப்பிலான 2 முழுமையான அமர்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மண்டல மாநாட்டின் "நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மக்கள் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்தல் 2014-2023" என்ற முதல் அமர்வில், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது திட்டத்தின் பயணம் குறித்த விளக்கக்காட்சி மற்றும் குறும்படம் ஒளிபரப்பப்படும்.
'நிர்வாகத்தில் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் அமர்வு நடைபெற உள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் மற்றும் அணுசக்தித் துறை, விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஆகியோர் தொடக்கவுரையாற்றுகின்றனர். 2022-ம் ஆண்டுக்கான பிரதமர் விருது குறித்த படம் திரையிடப்பட உள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், தேசிய மற்றும் மாநில அளவிலான பொது நிர்வாக அமைப்புகளை ஒரே அமைப்பில் கொண்டு வந்து பொது நிர்வாகத்தில் புதுமைகளைப் பகிர்ந்து கொள்வது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த எதிர்கால பொதுத் தீர்வை மாற்றுவது, நல்லாட்சி, மின் ஆளுமை, டிஜிட்டல் ஆளுமை போன்றவை ஆகும்.
***
AD/ANU/IR/RS/KPG
(रिलीज़ आईडी: 1963699)
आगंतुक पटल : 182