பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோதி யர்ராஜிக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
01 OCT 2023 8:51PM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜோதி யர்ராஜிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போட்டியில் துணிந்து ஈடுபடும் அவரது திறன், ஒழுக்கம் மற்றும் கடுமையான பயிற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என்றும் திரு.மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் தமது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது;
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மீ தடை ஓட்டத்தில் @JyothiYarraji அற்புதமான வெள்ளிப் பதக்கம்.
“போட்டியில் துணிந்து ஈடுபடும் அவருடைய திறன், ஒழுக்கம் மற்றும் கடுமையான பயிற்சி ஆகியவை பலனளித்தன. நான் அவரை வாழ்த்துகிறேன் மற்றும் எதிர்கால முயற்சிகள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்,” என்று பிரதமர் தனது பதிவில் கூறியிருக்கிறார்.
***
ANU/AD/BS/KPG
(रिलीज़ आईडी: 1963576)
आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam