பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசக் கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை 100% அடைந்ததற்காக ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 02 OCT 2023 8:51AM by PIB Chennai

இரண்டாம் கட்ட கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ‘மாதிரி’ பிரிவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசக் கிராமங்கள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை 100% அடைந்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

“பாராட்டுக்குரிய முயற்சியை மேற்கொண்டதற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களை நான் பாராட்டுகிறேன். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மகத்தான செயல்பாடாகும்.”

***

ANU/AP/RB/DL



(Release ID: 1963091) Visitor Counter : 138