பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2023 11:29AM by PIB Chennai
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமு'ம், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000மும் கருணைத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
***
ANU/AP/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1962670)
வருகையாளர் எண்ணிக்கை : 175
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam