ஜல்சக்தி அமைச்சகம்

ஜம்மு-காஷ்மீரில் 'கழிவுகளுக்கு எதிரான போர்' தூதராக பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் நியமிக்கப்பட்டுள்ளார்

Posted On: 30 SEP 2023 4:08PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிராமப்புறங்களில் சுகாதார சவால்களை எதிர்த்துப் போராட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாட்டின் மிக உயர்ந்த வீரதீர விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்ற, முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் பானா சிங்கை ஜம்மு காஷ்மீரில் "கழிவுகளுக்கு எதிரான போர்" முன்முயற்சியின் தூதர் என பரிந்துரைப்பதாக ஜம்மு -காஷ்மீரின் கிராமப்புற சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது. ஜம்முவின் ஆர்.எஸ்.புராவில் உள்ள  கேப்டன் பானா சிங் விளையாட்டரங்கில் நடைபெற்ற  தூய்மையே சேவை (தூய்மையே சேவை 2023) இயக்கத்தின் போது, ஜம்மு காஷ்மீரின் கிராமப்புற சுகாதார இயக்குநர் திரு சரண்தீப் சிங் இதை அறிவித்தார்.

 

சுகாதாரம் என்பது அனைவரின் பணி என்ற கருத்தை வலுப்படுத்தவும், நாடு தழுவிய பங்கேற்புடன் தூய்மை இந்தியா தினத்திற்கு (அக்டோபர் 2) முன்னோட்டமாகவும் சமூகப் பங்கேற்பின் மூலம் வெகுஜன இயக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டும் தூய்மையே சேவை 2023 செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 2 வரை கொண்டாடப்படுகிறது.

 

தூய்மையே சேவை-2023 இன் கருப்பொருள் 'சுகாதாரமான இந்தியா' என்பதாகும்இது துப்புரவுத் தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், பாரம்பரிய இடங்கள், ஆற்றங்கரைகள், படித்துறைகள், வடிகால்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் தூய்மை இயக்கங்களின் கவனம் குவிகிறது.

 

ஜம்மு-காஷ்மீரின் கிராமப்புற சுகாதார இயக்குநர் திரு சரண்தீப் சிங், பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் தூய்மையே சேவை நோக்கத்தில் இணைவது விழிப்புணர்வை ஏற்படுத்தும், நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கும்ஜம்மு காஷ்மீரின் இயற்கை அழகு  குறையாமல் பாதுகாப்பதிலும் தீவிரமாக பங்கேற்க உள்ளூர் சமூகங்களை ஊக்குவிக்கும் என்கிறார்.

 

தேசத்தைப் பாதுகாக்க முன்வரிசையில் பணியாற்றி வீரம் மற்றும் அர்ப்பணிப்புக்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட கேப்டன் சிங், இப்போது ஒரு புதிய பணியை மேற்கொள்கிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக இருக்கும்.

 

தூய்மையே சேவை 2023 நிகழ்ச்சியின் போது ஒரு பெரிய கூட்டத்தில் உரையாற்றிய கேப்டன் சிங், இந்தப் புதிய பணிக்கான தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். "நாட்டைப் பாதுகாக்க எனது வாழ்க்கையை அர்ப்பணித்ததைப் போலவே, இப்போது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். ஜம்மு காஷ்மீரின் இயற்கை அழகு ஒரு தேசிய பொக்கிஷம், அது வரும் தலைமுறைகளுக்கு தூய்மையாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையினர்முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள், கடைக்காரர்கள் உட்பட, 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்  சைக்கிள் பந்தயம் மற்றும் ஓவியப்போட்டியும் நடைபெற்று இவற்றில்  சிறந்து விளங்கியவர்களுக்கு இயக்குநர் பரிசுகளும் வழங்கினார்.

*****

 

ANU/AD/SMB/KRS

(Release ID: 1962357)



(Release ID: 1962433) Visitor Counter : 84