மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரதிய பாஷா உத்சவ் மற்றும் இரண்டு நாள் தொழில்நுட்பம் மற்றும் பாரதிய பாஷா உச்சி மாநாட்டை திரு தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்


மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் (டிசம்பர் 11) பாரதிய பாஷா தினமாகக் கொண்டாடப்படும்

Posted On: 30 SEP 2023 4:05PM by PIB Chennai

பாரதிய பாஷா உத்சவ் மற்றும் இரண்டு நாள் தொழில்நுட்பம் மற்றும் பாரதிய பாஷா உச்சி மாநாட்டை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை  அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் 2023, செப்டம்பர் 30 அன்று தொடங்கிவைத்தார். தேசிய கல்விக் கொள்கை -2020 தொலைநோக்கு பார்வைக்கு இணங்க, தற்போதைய கல்விச் சூழலிலிருந்து பாரதிய மொழிகளில் வேரூன்றிய ஒன்றுக்குத் தடையற்ற மாற்றத்தை எளிதாக்குவதையும், கல்வியில் பாரதிய மொழிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக செறிவூட்டப்பட்ட எதிர்காலத்திற்கான பாதையை அமைப்பதையும் இந்த உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பாரதிய பாஷா தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் தொழிற்சாலைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பயன்பாடுகளை காட்சிப்படுத்த ஒரு கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. பாரதிய மொழிகளின் வளமான இலக்கியப்  பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் ஒரு முக்கியமான புத்தகத்தை பல்வேறு அதிகாரிகள் மற்றும்  பிரமுகர்களுக்கு வழங்கியது உத்வேகமூட்டும் தருணமாகும்.

கேந்திரிய வித்யாலயா மாணவர்கள் 22 வெவ்வேறு மொழிகளில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

உச்சிமாநாட்டில் உரையாற்றிய திரு பிரதான், உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா, தொழில்நுட்பத்துடன் மிகவும் நெருக்கமான மற்றும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்திய அறிவைப் புரிந்துகொள்ள உலகெங்கிலும் இருந்து அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக வந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இந்திய மொழிகள் மற்றும் தொழில்நுட்பத்தின் இணைவு நாட்டின் திறமையாளர்களுக்கு எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கு கதவுகளைத் திறக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்திற்கான மொழி, தொழில்நுட்பத்தில் மொழி, தொழில்நுட்பத்தின் மூலம் மொழி ஆகியவை குறித்து உச்சிமாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் இந்திய மொழிகளுக்கு ஒரு வலுவான சூழலை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலகில் கணினிக் குறியீடு உருவாக்குவோரில்  மூன்றில் ஒரு பங்கினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும், இது தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் நாட்டின் திறமைக்கு சான்றாகும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

திரு சஞ்சய் குமார் பார்வையாளர்களிடம் பேசுகையில், சிந்தனையின் மேம்பாடு மொழி வளர்ச்சியிலிருந்து வருகிறது என்பதால் தேசிய கல்விக் கொள்கை -2020 அதை அங்கீகரித்து

சேர்த்துள்ளது, இது மாணவர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார். மொழித் தடைகளைத் தாண்டி, மீளுருவாக்கம், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு அனைவரையும், குறிப்பாக மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய ஸ்ரீதர் வேம்பு, கட்டமைப்புகள் குறித்த புரிதல் தேவைப்படும் கணினி குறியீடுகளை உருவாக்குவது போன்ற திறன்களில் தேர்ச்சி பெற, மொழிகளைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பிரபல தமிழ்க் கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான மகாகவி சின்னசாமி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை பாரதிய பாஷா தினமாக (டிசம்பர் 11) கொண்டாட மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. பாரதிய பாஷா உத்சவ் 2023 செப்டம்பர் 28 அன்று தொடங்கி 75 நாட்கள் நடைபெற்று  2023 டிசம்பர் 11 அன்று முடிவடையும். இந்நாட்களில் பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பாரத மொழிகள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடை பெறவுள்ளன.

கல்வி அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளர் திரு.கே.சஞ்சய் மூர்த்தி; கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு செயலாளர் திரு சஞ்சய் குமார்காஞ்சிபுரம் ஐ.டி-டி.எம் ஆளுநர் குழுவின் தலைவரும், ஜோஹோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புஏ.ஐ.சி.டி.இ., தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீதாராம்; பாரதிய பாஷா சமிதி தலைவர், ஸ்ரீ சாமு கிருஷ்ண சாஸ்திரி; யு.ஜி.சி., தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார்; என்.இ.டி.எஃப் தலைவர் திரு அனில் சஹஸ்ரபுதே; இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சைலேந்திர மோகன்; தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் தலைவர் டாக்டர் நிர்மல்ஜீத் சிங் கல்சி; பழங்குடியினர் நலத்துறை செயலர், அனில்குமார் ஜா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாரதிய பாஷா சமிதி, கல்வியாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி மற்றும் தகவல்  தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊடக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களின் செயலூக்கமான பங்கேற்புடன், பாரதிய மொழிகளில் கல்வியின் பார்வையை நனவாக்குவதற்கான விரிவான செயல்திட்டம் இரண்டு நாள் உச்சி மாநாட்டின் போது வகுக்கப்படும்.

***

ANU/AD/SMB/DL


(Release ID: 1962414) Visitor Counter : 157