கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கலங்கரை விளக்கங்களுக்கான முதலாவது விழா கோவாவில் தொடங்கியது

Posted On: 24 SEP 2023 7:23PM by PIB Chennai

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கோவாவின் பாஞ்சிமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அகுவாடா கோட்டையில் இந்திய கலங்கரை விளக்கங்களுக்கான முதலாவது விழாவைத் தொடங்கி வைத்தார்.

 

இந்தியாவின் 75 புகழ்பெற்ற கலங்கரை விளக்கங்களின் வளமான கடல்சார் வரலாற்றைப் புதுப்பிப்பதையும், புகழ்பெற்ற கதைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

கோவாவின் அகுவாடா கோட்டையில், நடந்த முதலாவது விழாவில் முதலமைச்சர் திரு. பிரமோத் சாவந்த் கலந்து கொண்டார்; மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், கோவா அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே மற்றும் மத்திய, மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

 

இந்த விழாவில் பேசிய மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால்,"இந்த திருவிழாவின் மூலம், கடலோர இந்தியா முழுவதும் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உள்ள பழமையான பாரம்பரிய சிறப்புகளை புத்துயிர் பெறச் செய்வதற்கான செயல்முறையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். 

 

 

தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்த புனிதமான முயற்சியில், புகழ்பெற்ற கலங்கரை விளக்கங்களை கல்வி, கலாச்சார மற்றும் சுற்றுலா மையங்களின் ஊக்கியாக மாற்றுவதன் மூலம் பிரதமர் திரு. மோடியின் தொலைநோக்கு பார்வையை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறோம்.

 

இருண்ட இரவுகளுக்கு மத்தியில் ஏராளமான மாலுமிகளுக்கும் கப்பல்களுக்கும் நம்பிக்கை ஒளியை வழங்கும் கடற்கரைகளின் அமைதிக்கான பாதுகாவலர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டனர்.

 

அதை மாற்றுவதற்கான எங்கள் முயற்சிதான் "கலங்கரை விளக்கம் திருவிழா". நமது தேசத்தின் வரலாற்றில் இந்த வரலாற்று விளக்குகள் ஆற்றிய முக்கிய பங்கைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதும், ஈடுபடுவதும், கல்வியூட்டுவதும் எங்கள் பணியாகும்,” என கூறினார்.

 

இந்தியாவின் முதல் கலங்கரை விளக்க விழாவின் முக்கிய சிறப்பம்சங்களாக கலாச்சார கண்காட்சிகள், கடல்சார் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அமர்வு, ஒளி, ஒலி நிகழ்வுகள், பிரபல பாடகர்களுடன் இனிமையான மாலை நேர பொழுதுகள், கடற்கரை உணவின் சுவைகள் ஆகியவை இடம் பெறுகின்றன.

*** 

SM/ANU/BS/KRS


(Release ID: 1960215) Visitor Counter : 134