பாதுகாப்பு அமைச்சகம்
கார்வார் கடற்படை தளம் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவை முப்படைகளின் தலைமை தளபதி பார்வையிட்டார்
Posted On:
24 SEP 2023 6:02PM by PIB Chennai
கார்வாரில் உள்ள கடற்படை தளம் மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ஆகியவற்றை முப்படைகளின் தலைமை தளபதி (சி.டி.எஸ்) அனில் சவுகான் நேற்று பார்வையிட்டார். கடற்படைத் தளத்தில் முக்கியமான உள்கட்டமைப்பு, தங்குமிடம் மற்றும் பிற முன்முயற்சிகளின் முன்னேற்றத்தை அவர் மதிப்பீடு செய்தார்.
கார்வார் கடற்படைப் பகுதி மற்றும் சீபேர்ட் திட்ட மூத்த அதிகாரிகளுடன் முப்படைகளின் தலைமை தளபதி ஆலோசனை மேற்கொண்டார். முன்னோக்கிய சிந்தனை மற்றும் தகவமைக்கக்கூடிய ஒன்றாக தளத்தை நிறுவுவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்துவரும் வரும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை பொருத்தமான எதிர்கொள்ளும் திறனுடன் எதிர்கால சவால்களுக்கு அதன் தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
***
SM/ANU/BS/KRS
(Release ID: 1960184)
Visitor Counter : 140