உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் வடக்கு மண்டல கவுன்சிலின் 31 வது கூட்டம் நடைபெற உள்ளது

प्रविष्टि तिथि: 24 SEP 2023 12:00PM by PIB Chennai

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் வரும் செவ்வாய் கிழமை நடைபெற உள்ள வடக்கு மண்டல கவுன்சிலின்31-வதுகூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, தலைமை தாங்குகிறார்.

 

வடக்கு மண்டல கவுன்சிலில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

 

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம், பஞ்சாப் அரசுடன் இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்தில் மாநிலங்களின் முதல்வர்கள், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் கலந்துக் கொள்ள உள்ளனர்

 

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

 

மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 இன் பிரிவு 15-22 இன் கீழ் 1957ஆம் ஆண்டில் ஐந்து மண்டல கவுன்சில்கள் நிறுவப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் இந்த ஐந்து மண்டல கவுன்சில்களின் தலைவராகவும், மாநில முதல்வர்கள் மற்றும் அந்தந்த மண்டல கவுன்சிலில் சேர்க்கப்பட்ட யூனியன் பிரதேசங்களின் நிர்வாகி, துணை நிலை ஆளுநர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

 

*** 

SM/ANU/BS/KRS


(रिलीज़ आईडी: 1960107) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Kannada