வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கனவு காணுங்கள், உறுதியுடன் இருங்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களியுங்கள்; தொழில்முனைவோர்களுக்கு ஊக்கமளித்த மத்திய அமைச்சர் திரு. பியூஸ் கோயல்

Posted On: 23 SEP 2023 6:54PM by PIB Chennai

இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குவது, தொழில் தொடங்குவது மற்றும் நடத்துவதை எளிதாக்குவதையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேம்படுத்தி வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் குறிப்பிட்டார். 

புதுதில்லியில் இன்று நடைபெற்ற பெரு வணிகத்தின் ‘தொழில்முனைவோர் அறிமுக' நிகழ்வில் உரையாற்றிய அவர், 2016 ஆம் ஆண்டில் 450  என்று இருந்த ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை, இன்று 1 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளளது. இது இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்றுகிறது என்றார்.

தனது சொந்த தொழில்முனைவு பயணத்தில்  எதிர்கொண்ட சவால்கள் பற்றிய நுண்ணறிவுகளை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். பங்கேற்பாளர்கள் அனைவரும் பெரிய கனவு காணவும், உறுதியோடு இருக்கவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் அமைச்சர் ஊக்குவித்தார். அவர்களின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் வகையில் அவர்களின் வெற்றி திகழ வேண்டும் என்று  தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் போது இந்தியா அடைந்த உலகளாவிய அங்கீகாரத்தை எடுத்துரைத்த திரு கோயல், பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியை உலகிற்கு வெளிப்படுத்த இது எவ்வாறு ஒரு வாய்ப்பை வழங்கியது என்பதையும் அமைச்சர் பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.

***

ANU/SM/BS/DL



(Release ID: 1959998) Visitor Counter : 111