நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 13 மின் ஏலங்களில் 18.09 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது

Posted On: 22 SEP 2023 12:56PM by PIB Chennai

கோதுமை மற்றும் ஆட்டாவின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்தும் சந்தை தலையீட்டிற்கான மத்திய அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்நாட்டு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கோதுமையை வாராந்திர இ-ஏலம் மூலம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2125/- என்ற இருப்பு விலையில் இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) விற்பனை செய்கிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு வாராந்திர ஏலத்திலும் 480-க்கும் அதிகமான கிடங்குகளில் இருந்து 2.00 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், 21.09.2023 வரை மொத்தம் 13 மின்னணு ஏலங்கள் நடத்தப்பட்டு, 18.09 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 23-ம் தேதி கோதுமையின் சராசரி விற்பனை விலை ரூ.2254.71 ஆக இருந்தது, இது 20.09.23 தேதியிட்ட மின் ஏலத்தில் குவிண்டாலுக்கு ரூ.2163.47-ஆக குறைந்துள்ளது. கோதுமையின் சராசரி விற்பனை விலை குறைந்து வருவது, வெளிச்சந்தையில் கோதுமையின் சந்தை விலை குறைந்துள்ளதையே காட்டுகிறது.


 

****

AD/ANU/SMB/RS/KPG

 

 



(Release ID: 1959642) Visitor Counter : 105