உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால் இன்று மக்களவையில் நாரி சக்தி வந்தன் மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்

Posted On: 19 SEP 2023 4:57PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இன்று மக்களவையில் நாரி சக்தி வந்தன் மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா நன்றி தெரிவித்த்துள்ளார்.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று, "1000" என்ற கொள்கையை செயல்படுத்தியுள்ளார் என்று திரு. அமித் ஷா சமூக ஊடக எக்ஸ் பதிவுகளில் கூறியுள்ளார்.மக்களவையில் இன்று அறிமுகம் செய்யப்பட்ட 'நாரி சக்தி வந்தன் மசோதா' நாட்டின் பெண்களுக்கு உண்மையான அர்த்தத்தில் அவர்களின் உரிமைகளை வழங்கும் முடிவு என்று அவர் கூறினார். 'மகளிர் தலைமையிலான அதிகாரமளித்தல்' என்பது மோடி அரசின் முழக்கம் அல்ல, மாறாக ஒரு தீர்மானம் என்பதை மோடி நிரூபித்துள்ளார். கோடிக்கணக்கான நாட்டுமக்கள் சார்பாக, இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுக்காக மோடி அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன் என்று திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

 

கொள்கையாக இருந்தாலும் சரி, தலைமையாக இருந்தாலும் சரி, இந்தியாவின் மகளிர் சக்தி எந்தத் துறையிலும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பெண்களின் ஆதரவும் பலமும் இல்லாமல் வலுவான மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை என்று மோடி அரசு நம்புகிறது. நாட்டின் பெண்களுக்கு உரிய உரிமைகளை வழங்கும் மோடி அரசின் இந்த முடிவு, வரும் காலங்களில் வளர்ந்த மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான முக்கிய தூணாக மாறும் என்றும்  திரு. அமித் ஷா கூறியுள்ளார்.

*********

(Release ID: 1958807)

 

SM/ANU/SMB/KRS(Release ID: 1958943) Visitor Counter : 78