நிதி அமைச்சகம்
2023-24-ம் நிதியாண்டில் (16.09.2023 நிலவரப்படி) மொத்த நேரடி வரி வருவாய் 18.29% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது
Posted On:
18 SEP 2023 4:20PM by PIB Chennai
2023-24-ம் நிதியாண்டிற்கான (16.09.2023 நிலவரப்படி) நேரடி வரி வருவாய் முந்தைய நிதியாண்டின் (அதாவது 2022-23 நிதியாண்டின்) இதே காலகட்டத்தில் ரூ.7,00,416 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.8,65,117 கோடியாக உள்ளது.
நிகர நேரடி வரி வருவாய் ரூ.8,65,117 கோடி (16.09.2023 நிலவரப்படி) கார்ப்பரேஷன் வரி (சி.ஐ.டி) ரூ.4,16,217 கோடி (நிகர வரிபிடித்தம் திரும்ப அளித்தல்) மற்றும் பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி) உட்பட தனிநபர் வருமான வரி (பிஐடி) ரூ.4,47,291 கோடி (நிகர வரிபிடித்தம் திரும்ப அளித்தல்) ஆகியவை அடங்கும்.
2023-24-ம் நிதியாண்டில் நேரடி வரிகளின் மொத்த வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.8,34,469 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ.9,87,061 கோடியாக உள்ளது. இது 18.2 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது.
கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ.4,71,692 கோடியாகவும், பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி) உள்ளிட்ட தனிநபர் வருமான வரி (பிஐடி) ரூ.5,13,724 கோடியாகவும் உள்ளது. சிறு துறை வாரியான வருவாய் ரூ.3,55,481 கோடி முன்பண வரியை உள்ளடக்கியது. வரி பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.5,19,696 கோடி; சுய மதிப்பீட்டு வரி ரூ.82,460 கோடி; வழக்கமான மதிப்பீட்டு வரி ரூ.21,175 கோடி; மற்றும் இதர சிறு தலைப்புகளின் கீழ் ரூ.8,248 கோடி வரி.
2023-24 நிதியாண்டில் (16.09.2023 நிலவரப்படி) முன்கூட்டிய வரி வருவாய் ரூ.3,55,481 கோடியாக உள்ளன, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அதாவது 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் முன்கூட்டிய வரி வருவாய் ரூ.2,94,433 கோடியாக இருந்தது. 16.09.2023 நிலவரப்படி ரூ.3,55,481 கோடி முன்கூட்டிய வரி வருவாயில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ.2,80,620 கோடியாகவும், தனிநபர் வருமான வரி (பிஐடி) ரூ.74,858 கோடியாகவும் உள்ளது.
2023-24 நிதியாண்டில் 16.09.2023 வரை ரூ.1,21,944 கோடி வரி பிடித்தம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1958580)
Visitor Counter : 173