மத்திய அமைச்சரவை

டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகைஅளவுகோலில் அமல்படுத்தப்பட்ட  வெற்றிகரமானடிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் இந்தியா - அமெரிக்கா இடையேஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 13 SEP 2023 3:27PM by PIB Chennai

இந்தியக் குடியரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஆர்மீனியக் குடியரசின் உயர் தொழில்நுட்பத் தொழில் அமைச்சகம்  இடையே டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2023 ஜூன் 12 ஆம் தேதி கையெழுத்திட்டதற்கு பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் மாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, அனுபவங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் (இந்தியா ஸ்டாக்) ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து  3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புத் துறையில் அரசுடன் அரசு (ஜி 2 ஜி) வணிகத்துடன் வணிகம் (பி 2 பி) என  இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பரிசீலிக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவற்றின் வழக்கமான நிர்வாகக் செயல்பாட்டு ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்படும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல நாடுகள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களுடன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒத்துழைத்து வருகிறது. இக்காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பையும் தகவல் பரிமாற்றத்தையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதன் சக நிறுவனங்கள் / முகவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் /  உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முன்முயற்சிகளுடன் இணக்கமாக உள்ளது, இது நாட்டை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாகவும் அறிவுசார் பொருளாதாரமாகவும் மாற்றுவதாகும். மாறிவரும் இந்த முன்னுதாரணத்தில், பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் வணிக வாய்ப்புகளை ஆராய்வது, சிறந்த நடைமுறைகளைப் பகிர்வது,  டிஜிட்டல் துறையில் முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவை உடனடி தேவையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1956912

***

AP/SMB/GK



(Release ID: 1957033) Visitor Counter : 125